சொல்லி சொல்லி கொடுத்த பின்பும் புயலவில்லை நூலறிவு
சொல்லாமல் வந்தது இந்த நட்பு என்னும் பொன்னுறவு
அழிவு பாதை செல்லினும் கை கோர்த்து நடந்தோம்
அச்சுறுத்தும் தேர்வுகளிலும் சிரித்து சிரித்து மகிழ்ந்தோம்
சோலையில் பூக்கும் பூக்கள் போல் சிறகடித்து பறக்கும் பறவைகள் போல்
சிதறி கிடக்கும் விண்மீன் போல் இனிமையானதோர் கூட்டம்
கூடத்தில் ஒரு எட்டப்பன் இருந்தாலும் அவனையும் வெறுத்ததில்லை
கூடி இருக்கையில் இளிச்சவாயனையும் விட்டுக் கொடுத்ததில்லை
அன்று சிரித்து சிரித்து களித்து திரிந்த நினைவுகள் கோடி
அதை ரசித்து விழுந்த கண்ணீரை இன்று கண்கள் மறைக்கும் மூடி
"இதோ இங்கு தான்" என்ற கதை கூறும் இடங்கள் ஓர் ஆயிரம்
"அன்று தான்" என்று சலித்து கொள்ளும் நாட்களும் ஆயிரம்
வேதனைகள் வந்தாலும் தீயதொன்று நினைத்ததில்லை
வானர படை என்றாலும் வன்முறை வழி கண்டதில்லை
கண் மூடி திறக்கும் முன் ஓடியது இந்த நான்காண்டு காவியம்
காலம் பல கடந்தாலும் அழியாது இந்த ஓவியம்
முன்னொரு நாள் "என் பெயர்" என்று தொடங்கிய நம் பேச்சு
மூன்றாம் வீட்டு கதை வரை பேசிய காலமும் கடந்தாச்சு
பல ஆண்டுகள் நகரும்; காலங்கள் மாறும்; கல்லுரி கூட்டம் ஒன்று பார்க்க நேரும்
புன்னகை ஒன்று மலரும், சிந்தனை அலைகளில் நெஞ்சமெனும் தோணி மிதக்கும்
கனத்த மூச்சு ஒன்று காற்றோடு கலக்கும், தூங்கிய நினைவுகள் சோம்பல் முறிக்கும்
கண்முன்னே அந்த நாட்களின் நிழற்படம் இன்னொரு முறை ஓடி சிரிக்கும்
If someone sounds uninterested in the conversation suddenly, for all that you know, it might be a nature's call for them! :)
No comments:
Post a Comment